உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி அக். 21 துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட உய்யக் கொண்டான் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கடை அமைப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி மாநகர் மாவட்டம் துவாக்குடி மண்டல தலைவர் விஜய் ஆனந்த் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமாரிடம் அளித்த மனுவில், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 12இல் உய்யக்கொண்டான் வாய்க்கால் உள்ளது இந்த வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் கட்டுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தில் ஈமச்சடங்கு செய்வதற்கு குளியல் தொட்டி அமைத்து தருமாறு துவாக்குடி நகராட்சி பரிந்துரை செய்த தருமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். அப்போது திருச்சி மாநகர மண்டல நிர்வாகி கார்த்திகை ஜோதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.