அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி கோரிய மாணவர் – மக்கள் சக்தி இயக்கத்தின் மூலம் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்!!

0 798
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் கல்வி வட்டாரம் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் மகாபதஞ்சலி. இவர் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகள் செய்து தரவும், பள்ளியை தரம் உயர்த்தி தரவும் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் ஆகியோர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மூலம் செய்தி வெளியே வந்த காரணத்தினால் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொப்பம்பட்டி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

 

மேலும் மாணவர்கள் மகாபதஞ்சலி மற்றும் நித்திபன் ஆகியோர் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் வழங்கினார்கள் .இவர்கள் எங்கள் பள்ளியை அனைவருக்கும் வெளி உலகத்திற்கு  தெரியும்படி செய்ய திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்திற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து கடிதயும் மாணவர்கள் மக்கள் சக்தி இயக்கத்திற்கு அனுப்பி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.