மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி

0 286
Stalin trichy visit

திருச்சி, ஜன.3  திருச்சி மாவட்டம்,  மணப்பாறையில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு மின் வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி.

டிசம்பர் 18 ம் தேதி முதல் 30 ம்தேதிவரை மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பை வழியுறுத்தி மின்சிக்கன வார விழா கடைபிடிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவையடுத்து மின் சிக்கன வார விழா ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று மாலை திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை செயற்பொறியாளர் தியாகராஜன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.‌

பேரணியானது சேதுரெத்தினபுரம், திருச்சி சாலை, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது. இந்த பேரணியின் போது மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த முழக்கங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் பொதுமக்களுக்கு மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.