முசிறியில் நிறைவடைந்த திட்டப்பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 231
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில் நிறைவடைந்த பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த பையித்தம்பாறை கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், வளையெடுப்பு கிராமத்தில் சமுதாயக்கூடம், ஊருடையாபட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், மகாதேவியில் அங்கன்வாடி மைய கட்டிடம், தொட்டியம் ஒன்றியம் மேய்க்கல் நாயக்கன்பட்டி மற்றும் எம்.களத்தூரில் அங்கன்வாடி மைய கட்டிடம், முசிறி ஒன்றியம் அய்யம்பாளையத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் ஆகியவை உள்பட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அருண் நேரு,மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன் உள்ளிட்ட பலர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடையுள்ள நிலையில் அவர்களின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார்.
நகராட்சி துறையில் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நீங்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று பேசினார். அமைச்சர் கே.என்.நேருவிற்கு கிராம பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒன்றிய மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.