இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பாக கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு லட்சம்
சமக்ர சிக்ஷா இயன்முறை மருத்துவர்கள் சங்கம் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா காரணமாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் காசோலையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

இந்த நிகழ்வில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் மருத்துவர் தெய்வகுமார், மருத்துவர் பாரதிதாசன் மற்றும் நித்யா, பூரணலட்சுமி ஆகியோர் நேரில் சந்தித்து வழங்கினார்.