குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி பலி

0 227
Stalin trichy visit

திருச்சி, ஜன.9  திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி நாச்சாரம்மாள் (வயது 80)  கணவர் இறந்த நிலையில் இரண்டு மகள்களும் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் கொட்டப்பட்டியில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில்  கொட்டப்பட்டி அருகே உள்ள பாறைக்கருகே உள்ள குட்டையில் கை கால்களை கழுவச் சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலைமீட்டு உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.