புகையில்லா போகி விழிப்புணர்வுப் பேரணி

0 209
Stalin trichy visit

திருச்சி, ஜன.9 புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஜமால் முகமது கல்லூரியின் விரிவாக்கப் பணிகள் மையம் (பகுதி V), திருச்சி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் திருச்சி நேரு யுவ கேந்திரா சார்பாக 08.01.2025 அன்று காலை 10.00 மணிக்கு “புகையில்லா போகி கொண்டாடுவோம்! & ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிப் பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தமாட்டோம்!!” எனும் பொருண்மையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியைத் திருச்சி மாவட்ட வன அலுவலர் எஸ்.கிருத்திகா கொடி அசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் செயலர் & தாளாளர் Dr. A.K. காஜா நஜிமுதீன் & திருச்சி மாவட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய இணை இயக்குநர் பொறியாளர் சிவரஞ்சனி  வாழ்த்துரை வழங்கினர்

இவ்விழிப்புணர்வு விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் து.இ.ஜார்ஜ் அமலரெத்தினம்  பேரணியின் முக்கியத்துவம் குறித்துத் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் பொருளாளர் ஹாஜி M.J. ஜமால் முகமது, உதவிச் செயலர் Dr. K. அப்துஸ் சமது > மதிப்புறு இயக்குநர் Dr. K.N. அப்துல் காதர் நிஹால், துணை முதல்வர், கூடுதல் துணை முதல்வர்கள், பகுதி-V ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செல்வராசு, பல்வேறு துறைப் பேராசிரியர்கள், திருச்சி நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர்  ஸ்ருதி, திருச்சி மாவட்ட மாசுக் கட்டுபாடு வாரிய உதவிப் பொறியாளர் G.இரவிச்சந்திரன் மற்றும் அத்துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம், மாணவர் எக்ஸ்னோரா, NSS, Leo Club, Rotaract Club, ADA, Helping Hearts, Gender Club, YRC, RRC, Consumer Club, Electoral Literacy Club, Drug Abolishers Association ஆகிய மன்றங்களில் இருந்து கலந்து கொண்ட 1000 மாணவர்களும் கையில் விழிப்புணர்வுப் பதாகைகளைக் கையிலேந்தி “புகையில்லா போகி கொண்டாடுவோம்!  ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிப் பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தமாட்டோம் என முழக்கமிட்டவாறு கல்லூரியில் தொடங்கி TVS Toll Gate, தலைமை தபால் நிலையம், RC ஸ்கூல், கலையரங்க மஹால், மத்தியப் பேருந்து நிலையம் வழியாகப் புனித ஜான் வெஸ்ட்ரி மைதானத்தைச் சென்று அடைந்தனர்.

போகி பண்டிகையின் பொது பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு நச்சு வாயுக்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர்த்த மாணவர்கள் விழிப்புணர்வு பிரசுரத்தினை வழங்கி சென்றனர்.

இப்பேரணியின் நிகழ்வுகளைப் தமிழ்த்துறைப் பேராசிரியர்  பிரபாகரன் தொகுத்து வழங்கினார். பகுதி-V ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செல்வராசு , திருச்சி மாவட்ட மாசுக் கட்டுபாடு வாரிய உதவிப் பொறியாளர் G.இரவிச்சந்திரன்  விழிப்புணர்வுப் பேரணியை ஒருங்கிணைப்பு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.