வேன் மோதியதில் இரும்பு வியாபாரி உயிரிழப்பு
திருச்சி, ஜன.10 மணப்பாறையில் இருசக்கர வாகனத்தின் மீது டிராவல்ஸ் வேன் மோதியதில் பழைய இரும்பு வியாபாரி உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது சபரிமலையில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற டிராவல்ஸ் வேன் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணப்பாறை, எடத்தெருவைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி அப்துல் கரீம் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த செவலூரைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 69) என்பவர் படுகாயமடைந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.