திருச்சியில் மாநில அளவிலான யோகா போட்டி

0 365
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் 600‌க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி ஶ்ரீ நற்பவி யோகாலயா உரிமையாளர் மற்றும் ஆதவன் கலை & அறிவியல் கல்லூரி யோகாத்துறை தலைவர் பரமேஸ்வரன் , ஶ்ரீ நற்பவி யோகாலயா இயக்குனர்  சித்ரா பெருமாள்  ஆகியோர்  தலைமையில் 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி , திருச்சி வயலூர் மெயின்ரோடு சோமரசம்பேட்டையில் அமைந்துள்ள ஜோதி மஹாலில் நேற்று  நடைப்பெற்றது.
ஶ்ரீ நற்பவி யோகாலயா உரிமையாளர் திரு.பரமேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரான ஐஸ்வர்யா எஸ்டேட்ஸ் & ஜோதி மஹால் உரிமையாளர் ஜோதி மகாலிங்கம்  மாநில அளவிலான யோகாசனப் போட்டியினை குத்துவிளக்கு ஏற்றி
துவக்கி வைத்தார்.

யோகாசனப் போட்டிக்கு 600க்கும் மேற்பட்ட பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் , சிறப்பு குழந்தைகள்,மற்றும் பெரியவர்கள் அவரவர்‌ வயதுக்கேற்றப் பிரிவில் கலந்துக்கொண்டு‌ சிறந்த முறையில் ஆசனங்களை செய்தனர்.

சிறப்பு விருந்தினரான ஆதவன் கலை & அறிவியல் கல்லூரி முதல்வர்காமராஜ்  சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரான ஶ்ரீ சக்ரா மற்றும் இயற்கை மருத்துவர் கெளதம்  மாநில அளவிலான யோகாசனப் போட்டியில், வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினார்.
ஶ்ரீ நற்பவி யோகாலயா இயக்குனர் சித்ராபெருமாள்  நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.