சிறுகனூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் காயம்

0 330
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகே அடுத்தடுத்து 4 கார்கள் மோதிய விபத்தில் 2 1/2வயது குழந்தை உள் பட 3 பேர் காயமடைந்தனர்.

தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தைவிட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார்கள் அடுத்தடுத்து வந்தன.

இந்நிலையில் சமயபுரம் அருகே சிறுகனூர் பெரியார் திடல் அருகே கார்கள் ஒன்றையொன்று முந்தி செல்ல முயன்றபோது 3 கார்கள் அடுத்தடுத்து மோதி நடுரோட்டில் நின்றது. இதையடுத்து தென்காசியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் (31)  சேர்மா என்பவர் ஓட்டி வந்த கார் அந்த கார்கள் மீது மோதி தலைகுப்புறமாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சேர்மா, அவரது மனைவி ஸ்ரீதேவி, 2 1/2 வயது மகள் யாஷிகா ஆகிய 3 பேர் காயத்துடன் உயிர்த் தப்பினர். இந்த விபத்தை கண்ட அப்பகுதியினர் அவர்களை மீட்டு இருங்களூரில் உள்ள தனி யார் மருத்துவக்கல்லூரிமருத் துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று புறப்பட்டுசென்றனர். மேலும் மற்ற கார்களில் உள்ளவர்கள் காயம் இன்றி உயிர்த்தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.