உண்டியல் சேமிப்பு தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு பள்ளி மாணவி

0 712
Stalin trichy visit

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

இந்த நிலையில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பூலாங்குடி பள்ளியில் தேவையான நூலகம் கட்ட பூமி பூஜை நிகழ்வினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்தப்பள்ளியில் பயின்ற சிறந்த மாணவி விருதுபெற்ற எம்.தீபஸ்ரீ தான் சேர்த்து வைத்த சிறு சேமிப்பு தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக   பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம்  வழங்கினார். இதனை முதலமைச்சரிடம் வழங்குவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.