விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த எஸ்.எஸ்.ஐ செல்வராஜ்.
இவர் கடந்த19ம் தேதி அன்று சமயபுரம் பள்ளிவிடை அருகே சென்று கொண்டு இருந்த போது சாலை விபத்தில் சிக்கினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ செல்வராஜின் மரணம் சக போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.