கருமண்டபம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடியரசு தின விழா

0 201
Stalin trichy visit

திருச்சி, ஜன.27 கருமண்டபம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 76ஆவது குடியரசு தின விழா

நமது இந்திய திருநாட்டின் சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்கள், கருமண்டபம் வசந்தநகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜே.பி. நகர், ஜே.ஆர்.எஸ். நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் கடந்த 8-8 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாப்பட்டு வருகிறது.

இன்றைய 76ஆவது குடியரசு தினத்தில், கருமண்டபம் JRS நகரில், நலச்சங்க துணைத் தலைவர்  கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலச்சங்க துணைச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் அந்தோணிசாமி, துணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

நலச்சங்கத்தின் துணைத் தலைவலர் புஷ்பராஜன் (வனக்காவலர் ஓய்வு) தேசியக் கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். 55ஆவது மாமன்ற உறுப்பினர்  ராமதாஸ்  நமது நலச்சங்கத்தின் பணிகள் குறித்ததும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் பேசினார்.

நலச்சங்கம் முன்வைக்கும் குடிநீர் தட்டுப்பாடு, மழைநீர் வடிகால், தெரு நாய் தொல்லை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தக்க முறையில் நிறைவேற்றுவேன் என உறுதி கூறினார். நலச்சங்கத்தின் செயலாளர் அக்பர் ஹூசைன் நலச்சங்கத்தின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்தும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் செய்ய இருக்கும் பணிகள் குறித்தும் பேசினார்.

இவ்விழாவில் நலச்சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவின் இறுதியில் சங்கத்தின் பொருளாளர் சகாயராஜா வருகை தந்த அனைவருக்கும் மற்றும் விழா நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் (குறிப்பாக செயலாளர் மற்றும் அவரது குழுவினர்) நன்றி தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.