அரசுமேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா

0 361
Stalin trichy visit

திருச்சி, ஜன.27  திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அரசுமேல்நிலைப் பள்ளியில் 76 வது குடியரசு தின விழா தலைமையாசிரியர் முனைவர் மா. சரவணவேல் தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் சாய் சுப்பிரமணியன் வரவேற்றார்.

புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர் ஆலிஸ் செல்வராணி ஜோசப் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஜீவானந்தம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாஸ்கர் மற்றும் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவிலிருந்து நித்யா, ஜெகதீஸ்வரி,
ஹென்றிபிரபாகர், ஆலம்பாக்கம் புவனேஸ்வரி மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளியின் இயற்பியல் முதுகலை ஆசிரியர் விஜய் சிறப்புரையாற்றினார். மாணவர்கள் குடியரசு தினத்தின் சிறப்பை உரையாக நிகழ்த்தினர். பள்ளியின் உடற்கல்வித் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது. நன்றியுரை சுமதி உதவித் தலைமையாசிரியர் வழங்க நிகழ்ச்சியை முதுகலை பொருளியல் ஆசிரியர் இந்திரஜோதி தொகுத்து வழங்க இனிதே நிறைவுற்றது. நிறைவாக மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.