தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

0 322
Stalin trichy visit

திருச்சி, ஜன.27  திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பாலக்கரை பகுதியில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வழிகாட்டுதலின் பெயரில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் ஜன.25 அன்று நடைபெற்றது .
கூட்டத்திற்கு மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் தலைமை தாங்கினார் பகுதி கழகச் செயலாளர் ராஜ்முஹம்மது வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்
தலைமைக் கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் மாநில அயலக அணி துணைச் செயலாளர் பரிதிஇளம்சுருதி சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, செந்தில், துணைமேயர் திவ்யா, மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.