அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

0 575
Stalin trichy visit

திருச்சி, ஜன.27 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைகோரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

எசனைகோரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதூர் உத்தமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம் ,பொது மருத்துவர் பிரின்சி அந்தோணி ஜெகிலா மற்றும் பல் மருத்துவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு கண், பல், ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது மேலும் பொது பரிசோதனைகளும் நடைபெற்றது.

இந்த பரிசோதனை முகாமில் 75 மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகள் கூறி மருந்து மாத்திரைகள் வழங்கினர். இந்த முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன், கிராம சுகாதார துறை செவிலியர் மரிய ஜெயசீலி,துளசி, சித்ரா, மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.