நவாஸ் கனி எம்.பி. மீது அவதூறு : இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியினர் புகார்

0 418
Stalin trichy visit

திருச்சி, ஜன.27   தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்.பி. யை அவதூறாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர்..

அந்த புகார் மனுவில் :- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கீழ்த்தரமான சொற்களால் அவதூராகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் மத மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ள வேலூர் இப்ராஹிம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் இன்று காலை திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த நிகழ்வின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் சையது அக்கீம். மாணவரணி மாநில தலைவர் அன்சர் அலி, தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் ஷேக் முகமது கௌஸ்,  மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் அஜும், எஸ் டி யூ மாவட்ட தலைவர் அப்துல் கலாம், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஆயிஷா, வர்த்தக அணி சையது முகமது. ஐடி லிங்க் சம்சுதீன் ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.