துணை முதலமைச்சர் திருச்சி வருகை: அமைச்சர் அன்பில்மகேஸ் அறிக்கை

0 211
Stalin trichy visit

திருச்சி, ஜன.28 தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர் அணி செயலாளர்  தமிழ்நாடு துணை  முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.28) மதியம் 12.30 மணியளவில்  சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்து மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா ஜாம்புரி தேசிய திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி
துவக்க விழா மற்றும் இலங்கை மறு வாழ்வு மைய முகாமில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

எனவே துணை முதலமைச்சரை வரவேற்க விமான நிலையத்தில் மாநில,மாவட்ட,
மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,, பகுதி,ஒன்றிய, நகர, பேரூர் ,வட்ட,வார்டு,கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு  தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.