அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் தினமும் முறையாக வருவதில்லை : பெற்றோர்கள் புகார்

0 353
Stalin trichy visit

திருச்சி, ஜன. 27  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பூனாட்சி கிராம அரசு பள்ளிக்கு  ஆசிரியர்கள் தினமும் முறையாக வருவதில்லை என மாணவ மாணவிகள் பெற்றோர்கள் புகார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பச்சைமலை அடிவாரத்தை சேர்ந்த கிராமம் பூனாட்சி. இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு தான் முறையாக ஆசிரியர்கள் வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் ஒருவர் இடைநிலை ஆசிரியர் ஒருவர் என இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர் இந்நிலையில் தலைமை ஆசிரியர் பணிக்கு ஆள் நிரப்பப்படாததால் தற்போது இடைநிலை ஆசிரியர் மட்டும் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த ஆசிரியரும் முறையாக பள்ளிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது வாரத்திற்கு இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் மட்டும் வருவதாகவும் அப்படியே வந்தாலும் பாதி நேரத்திலேயே பள்ளியை மூடிவிட்டு அவர் புறப்பட்டு சென்று விடுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1974 முதல் இப்பகுதியில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வந்த நிலையில் ஆசிரியர்கள் முறையாக வருகை தந்து கல்வி கற்பிக்காததால் பல பெற்றோர்கள் குழந்தைகளை வெளியூரில் உள்ள பள்ளிகளில் சேர்த்து விட்டதால் தற்போது ஐந்து மாணவர்கள் மட்டுமே இந்த பள்ளியில் பயின்று வருகிறார்கள். பணிபுரியும் ஒரு ஆசிரியரும் முறையாக பள்ளிக்கு வராததால் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது

. மலைவாழ் மக்களுக்கென அரசு பல சலுகைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உதவி வரும் வேலையில் அரசால் நியமிக்கப்படும் ஆசிரியர் போன்ற ஊழியர்கள் முறையாக பணிபுரியாததால் தாங்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக இப்பகுதி பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் வருத்தத்தோடு தெரிவித்தனர். எனவே மாற்றாக வேறு ஒரு ஆசிரியரை நியமித்து முறையாக தினமும் ஆசிரியர் வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.