மருத்துவமனையிலிருந்து அமைச்சர் ரகுபதி வீடு திரும்பினார்

0 193
Stalin trichy visit

திருச்சி, ஜன.28  திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்று வந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.

சென்னையில் இருந்து, திருச்சி விமானநிலையத்துக்கு ஜன.25–ம் தேதி வந்த அமைச்சர் ரகுபதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் டாக்டர்கள் ஆலோசனையின் பேரில், அமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார். இதையறிந்து, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். கடந்த 2 நாள்களாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த அமைச்சர் ரகுபதி நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.