சாலை பாதுகாப்பு வார விழா : துண்டு பிரசுரங்கள் விநியோகம்

0 284
Stalin trichy visit

திருச்சி, ஜன. 30  திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடராஜன் (திருச்சி மேற்கு) சுரேஷ் பாபு (ஸ்ரீரங்கம்)ஆகியோர் இன்றுதொடங்கி வைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிமண்டலத்தின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு இந்த மாதம் கடைப்பிடிப்பதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .அந்த வகையில் விழிப்புணர்வு பட்டிமன்றம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் ,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை ,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பொது மக்களுக்கு பயனிகளுக்கு பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் வழங்குதல் ,தலைக்கவசம் அணிய வேண்டும் என்று இரண்டு சக்கர வாகன விழிப்புணர் பேரணி, இன்று தொடங்கி வைக்கப்பட்டது. வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடதுபுரத்திலேயே வாகனங்களை செலுத்துதல் வேண்டும் .முன் செல்லும் வண்டியினை வாகன ஓட்டுனர்கள் முந்தி செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் வாகன ஓட்டுநர் குறுக்கு சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தை குறைத்துச் செல்ல வேண்டும். வழித்தடம் மாறும் முன் முறையான செய்கையை காட்டி வாகனத்தை செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மஞ்சள் கோட்டினை தாண்டி செல்லக்கூடாது வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் தொடர்ந்து வாகனத்தில் உள்ள ஒலிப்பானை பயன்படுத்துதல் கூடாது போன்ற சாலை பாதுகாப்பு முக்கிய விதிகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் பயணிகள் பேருந்தில் பயணம் செல்லும் பொழுது ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ செய்யக்கூடாது. படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் .படிக்கட்டில் இருந்து செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் .ஓட்டுநருக்கு இடையூறாக பயணம் செய்யக்கூடாது தலை ,கை ,கால்களை வெளியே நீட்டக்கூடாது
இவை அனைத்தையும் பொதுமக்களாய் நாம் கடைபிடிக்க வேண்டும். சாலை உபயோகப்பாளர்கள் சாலையில் செல்லும் போது இருபுறமும் நன்கு கவனித்து சாலை கடக்க வேண்டும், வாகனம் செல்லும் சாலையை ஆக்கிமித்து செல்லாதீர். இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் நடைமடையில் நடந்து செல்ல வேண்டும் வாகனங்களை போக்குவரத்துக் இடையூறாக நிறுத்தாதீர் .சாலையை கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். எனவே இது போன்ற சாலை விதிகளை நாம் கடைபிடிக்க வேண்டும்

இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொது மேலாளர் ஆ .முத்துகிருஷ்ணன் துணை மேலாளர்கள் சுரேஷ் குமார்( வணிகம்) சாமிநாதன்( தொழில்நுட்பம் )ரவி பணியாளர் மற்றும் சட்டம்,  ராஜேந்திரன்( திருச்சி )மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.