மின்சார பைக் வெடித்ததில் கார், பைக் எரிந்து சேதம்
திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள வள்ளலார் நகர் பகுதியில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீப்பற்றி எரிந்ததில் கார்,மோட்டார் பைக் சேதமடைந்தது.
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பூங்கனியன் (33) . தற்போது நம்பர் 1 டோல்கேட் அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள வள்ளலார் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் திருச்சி காவல்துறைஆணையர் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு தனது எலக்ட்ரிக் பைக்கை சார்ஜ் போட்டுவிட்டு வீட்டில் தூங்கிய போது அதிகாலை 3 மணி அளவில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி எதிர்பாராத விதமாக வெடித்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அருகில் இருந்த வாகனமான கார் மற்றும் மோட்டார் பைக்கிற்கும் தீ பரவி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் 4 லட்சம் என கூறப்படுகிறது.
இச்சம்பம் குறித்து பூங்கனியன் சமயபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.