கார் மோதியதில் பெண் உயிரிழப்பு
திருச்சி ஜன 30 – திருச்சி தஞ்சை சாலையில் கார் மோதி நடந்து சென்ற பெண் உயிரிழந்தார்.
திருச்சி அரியமங்கலம் மலையப்பன் நகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் சகாயம் செல்வம். இவரது மனைவி ரோசம்மாள் (வயது 55). இவர் திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் அவரது தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ரோசம்மாளை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் .இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.