டால்மியா பள்ளி குழுமங்களில் ஆண்டு விழா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா பள்ளி குழுமங்களின் சார்பில் ஆண்டு விழா டால்மியா கலையரங்கில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் கணபதிராமன் தலைமை வகித்தார்.
டால்மியா சிமெண்ட் ஆலையின் தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.
விழாவில் திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் எஸ். நீலகண்டன் சிறப்புரையாற்றி 10,12 ம் வகுப்புகளில் அரசு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த ஆண்டு விழாவில் டால்மியா சிமெண்ட் ஆலையின் பொது மேலாளர் ஐ. சுப்பையா மற்றும் உயர் அதிகாரிகள் ரமேஷ் பாபு குமரகுரு டால்மியா வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் மது , டால்மியா மேல்நிலைப்பள்ளி முதல்வர் மனோகரன், ராமகிருஷ்ணா டால்மியா தொழிற் பயிற்சி நிறுவன முதல்வர் மணிமாறன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.