அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி, பிப்.3 தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின்56 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழக நிருவாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.