திருச்சி விமான நிலையத்தில் ரூ.42.81 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

0 255
Stalin trichy visit

திருச்சி, பிப். 11 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கோலாலம்பூர் பயணியிடமிருந்து ரூ.42.81 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். – மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் பயணி ஒருவரின் ஜீன்ஸ் பேன்ட், உள்ளாடையில் இருந்த பெல்ட் போன்ற பகுதியில் பசை வடிவில் ரூ.42.81லட்சம் மதிப்பிலான 494 கிராம் எடையுள்ள ‘தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர், குறிப்பிட்ட பயணியிடம் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.