குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

0 359
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 16 வது வார்டு முத்தன் தெரு பகுதியில் கடந்த சில தினங்களாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு ஆளான மக்கள் பஸ் நிலையம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. மற்ற புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாத நிலையில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.

ஆகவே உடனே குடிநீர் வழங்கிட வேண்டும் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.