திருச்சி என்.ஐ.டி. 17-வது பட்டமளிப்பு விழா; நாளை நடக்கிறது

0 282
Stalin trichy visit

தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சி (என்.ஐ.டி.) 17-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணி அளவில் கழக வளாகத்தில் பார்ன் ஹாலில் நடக்கிறது. இந்த விழாவில் பிராந்திய பொறியியல் கல்லூரி (ஆர்.இ.சி.) தற்போதைய என்.ஐ.டி. திருச்சியின் 54-வது தொகுதி மாணவர்கள் பட்டம் பெறவுள்ளனர்.

முதன்மை விருந்தினராக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவருமான (சி.ஐ.ஐ.) டி.வி.நரேந்திரன் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றுகிறார். விழாவை என்.ஐ.டி. திருச்சி நிர்வாகக்குழு தலைவர் பாஸ்கர் நடத்துகிறார். என்.ஐ.டி. இயக்குனர் மினிஷாஜிதாமஸ் அறிக்கை அளித்து பட்டங்களை வழங்குகிறார்.

இதுவரை இல்லாத உச்சமாக 1,793 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது. இதில் 10 பிரிவுகளில் இருந்து 875 இளங்கலை பட்டதாரிகளும், 29 பிரிவுகளில் இருந்து 744 முதுகலை பட்டதாரிகளும், 174 முனைவர் பட்டதாரிகளும் பட்டம் பெற் உள்ளனர். கொரோனா நெறிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த நிகழ்வு நேரடி மற்றும் மெய்நிகர் என இருவழிகளிலும் நடத்தப்பட்டு இணையவழியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.