ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
ஊதியம் வழங்காததை கண்டித்து மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு
தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியார்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 ம் தேதி மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 81 பேர் பணியாற்றி வரும் நிலையில் 13ம் தேதி ஆகியும் அவர்கள் வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்படவில்லை. இதனால் வேதனை அடைந்த தூய்மை பணியார்கள் இன்று காலை நகராட்சி நுழைவு வாயில் முன்பு பணியை புறக்கணித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை போலீசார் மற்றும் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ஒப்பந்த பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதியத்திற்குள் ஊதியம் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.