மின்இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் : செயற்பொறியாளர் உள்பட இருவர் கைது

0 275
Stalin trichy visit

திருச்சி, பிப்.17  மின்இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் : செயற்பொறியாளர் உள்பட இருவர் கைது

திருச்சி, கே.கே.நகர், இந்திராகாந்திதெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் திருச்சி கே.கே.நகரில் தனது பெயரில் பேட்மிட்டன் கோர்ட் கட்டுவதற்கு மும்முனை மின்சாரம் வேண்டி விண்ணப்பித்ததன் பேரில் மின் இணைப்பு பெற கே.கே.நகர் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர்,என்பவரை அணுகியபோது அவர் ரூ.10,000/- மின்இணைப்பு கொடுக்க கையூட்டு கேட்டு, அதன் தொடர்ச்சியாக இன்று  சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,  துணை கண்காணிப்பாளர்மணிகண்டன் தலைமையில் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது உதவிசெயற்பொறியாளர் சந்திரசேகர் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை சீனிவாசனிடமிருந்து பெற்று அந்த பணத்தை தனது தனிப்பட்ட உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, என்பவரிடம் கொடுத்து அவர் வைத்திருந்தபோது கையும் களவுமாக இருவரும் பிடிபட்டுள்ளனர். இது தொடர்பாக கே.கே.நகர் மின்சார வாரிய அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.