ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
திருச்சி, பிப்.17 திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா (21) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு 3 ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று ஊருக்கு வருவதற்காக இன்டர்சிட்டி ரெயிலில் மணப்பாறைக்கு வந்தார். மணப்பாறை ரெயில் நிலையத்தை ரெயில் வந்தடைந்த போது அதில் இருந்து இறங்க முற்படவே தடுமாறி கீழே விழுந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து சிறிது தூரம் சென்று ரெயிலை நிறுத்திய பின்பு பார்த்த போது ரயிலுக்கு அடியில் சேக் அப்துல்லா உடல் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அவரை கடும் போராட்டத்திற்கு பின் அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார் மீட்டனர். இருப்பினும் உடல் சிதறிய நிலையில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.