திருச்சி சரகத்தில் 32 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டி.ஐ.ஜி.வருண்குமார் உத்தரவு

0 301
Stalin trichy visit

திருச்சி, பிப். 19 திருச்சி சரகத்தில் 32 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கரூர் டவுன் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய மணிவண்ணன், மாயனூர் காவல் நிலையத்திற்கும், திருச்சி துவாக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிய ஈஸ்வரன், கரூர் டவுன் காவல் நிலையத்திற்கும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிய பாலகிருத்திகா, கரூர் அமலாக்க பிரிவுக்கும் பணியிடை மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். இதேபோல், துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கும், கவிதா மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஜெயா லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், லால்குடியில் பணியாற்றிய அழகம்மை, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சோமரசம்பேட்டை காவல்நிலைய முகமது ஜாபர், ராம்ஜிநகர் காவல் நிலையத்துக்கும், மண்ணச்சநல்லூர் ரகுராமன், மணப்பாறை காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..இதேபோல், திருச்சி சரகத்திற்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 32 காவல் ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம் செய்து டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.