பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
திருச்சி, பிப்.21 திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடந்தது. அப்போது பஞ்சமுக பைரவருக்கு பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர் பக்தர்களுக்கு அருளினார். அப்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு விளக்கேற்றி திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபட்டனர்.