தா.பேட்டை அருகே பைக்குகள் மோதல் ஒருவர் படுகாயம்

0 393
Stalin trichy visit

திருச்சி, பிப். 21 திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பைக்குகள் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

தா.பேட்டை அடுத்த பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் ராஜ்குமார் (19) இவர் பைக்கில் துறையூர் – முசிறி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கண்ணனூர் பஸ் நிறுத்தம் அருகே கீழக்கொட்டம் பகுதியை சேர்ந்த ராகுல் (19) என்பவர் ஓட்டி வந்தபைக் மீது மோதியது. இந்தவிபத்தில் படுகாயமடைந்த ராஜ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு துறையூர் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் ராகுலை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.