திருச்சி SRM மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருச்சி, பிப்.22 திருச்சி SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், துணை மருத்துவப்படிப்பு (அலெய்டு ஹெல்த் சயின்ஸ்), முதலாவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தலைவர் Dr. R. சிவகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக Dr. B. ஸ்ரீதர் இந்திய மருத்துவ சங்கம் (ஐ எம் ஏ) தமிழ்நாடு மாநில கிளை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் Dr. A. சுந்தரராஜன் வரவேற்புரை வழங்கினார். மேலும் இவ்விழாவில் Dr.N. சேதுராமன் முதன்மை இயக்குனர் ராமாபுரம், சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி வளாகம், Dr. N. பாலசுப்ரமணியன் இணை இயக்குனர் திருச்சி வளாகம், Dr. S. ரேவதி டீன், திருச்சி SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் DR. G. ரவிக்குமார் மருத்துவக் கண்காணிப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
மேலும் பட்டமளிப்பு விழாவில் மருத்துவக் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 176 மாணவ வழங்கப்பட்டது. மாணவியர்களுக்கு பட்டம்