கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் காணொளி காட்சி மூலம் திறப்பு

0 169
Stalin trichy visit

திருச்சி, பிப். 22 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.-ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழா நிகழ்வில் காணொளி காட்சி மூலம் திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 28 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி காந்திசந்தை அருகே உள்ள அரசு வைகவுண்ட்ஸ் கோஷன் (மகளிர்) முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடி, புதிதாக திறக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) பி.அன்பரசி, உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட கல்வி அலுவலர் ப.செல்வராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் ச.கல்பனா, கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல் முருகன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.