அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறப்பு : எம்.எல்.எ. பங்கேற்பு
திருச்சி, பிப்.22 அரசுப் பள்ளியில் ரூ.64 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறப்பு எம் .எல்.ஏ குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் புஞ்சை சங்கேந்தி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 64 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ சௌந்தரபாண்டியன் பள்ளிக்கு நேரில் சென்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் செயலாளர் சுந்தர்ராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதா அறிவழகன், செல்வகுமார், புகழேந்தி,மணி ,செந்தில்குமார் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்