திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது
திருச்சி,பிப்.22 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் பால்பண்ணை சர்வீஸ் ரோடு அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதால், விறகுப்பேட்டை, தேவதானம், மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை ஜெகநாதபுரம், ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 23.02.2025 ஒருநாள் இருக்காது.
24.02.2025 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளர்.