நிவாரண நிதிக்கு பெல் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.
பாரத மிகுமின் நிறுவனம் திருச்சி, திருமயம் பணியாளர்கள் சார்பாக அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் முதலமைச்சரின் நிவாரணப்பணிக்காக ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினர்.
பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அவரது அலுவலகத்தில் சந்தித்து அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பெல் நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனர்.