திருச்சியில் தரைக்கடை – சிறுகடை வியாபாரிகள் சங்கத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

0 460
Stalin trichy visit

திருச்சி மாவட்ட தரைக்கடை & சிறு கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

 

தரைக்கடை மட்டும் சிறுகடை வியாபாரிகளை மாவட்ட நிர்வாகம்,காவல் துறையினர் மற்றும் பல அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அவர்களை தொழில் செய்ய விடாமல் தடுக்கின்றனர் – இதுபோன்ற நிலையை கைவிட வேண்டும்,தெரு வியாபாரிகள் வியாபாரம் செய்ய சட்டத்தில் இடம் இருப்பதை உணர்ந்து அச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அதே போல் திருச்சி காந்தி மார்க்கெட்டில் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அனுமதி அளிக்க மறுக்கிறது,இதனை கைவிட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.