அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு
திருச்சி, மார்ச் 11 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர் காளியம்மன் கோவில் அருகில் உடல்நலம் சரியில்லாமல் முதியவர் ஒருவர் படுத்திருந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் 108க்கு தகவல் தெரிவித்தனர். முதியவரை பரிசோதித்த 108 ன் செவிலியர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து வையம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலினை அடுத்து வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் இவர் வீரப்பூர் பெரியகாண்டி அம்மன் கோவில் பின்புறம் குப்பை பொறுக்கி கொண்டிருந்தவர் என்பதும் சுமார் 60 வயசு மதிக்கத்தக்க முதியவர் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.