பொன்மலையில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திருச்சி, மார்ச் 11 கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை பொதுக்கூட்டம். திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பெயரில் கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதி கழகம் 44 மற்றும் 44 (அ) வட்டக் கழகங்களின் சார்பில் மேல கல்கண்டார் கோட்டை திரு.வி.க. திடல் பகுதியில் மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் தர்மராஜ் அனைவரையும் வரவேற்றார்
44-வது வட்டச் செயலாளர் சுப்பிரமணி மற்றும் 44(அ) வட்டக் கழக செயலாளர் துரை ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் ஓசூர் அப்துல் ரகுமான் பாரி , கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன்,
இளம் பேச்சாளர் விஜயலெட்சுமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் கூட்டத்தில் இறுதியில் 44 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பியூலா மாணிக்கம் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாநகர அவைத் தலைவர் நூர்கான், மாநகரதுணைச் செயலாளர்கள்
பொன்செல்லையா, சரோஜினி மாவட்ட மாநகர வட்டக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.