திருவாசியில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி

0 288
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 14  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி நூலக கட்டிடத்தில்
வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி தலைமையில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் பயிர்களில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி திட்ட விளக்க உரை ஆற்றினார்.சிறுகமணி KVK இனண பேராசிரியர் ராஜன் பாபு நீரின் முக்கியத்துவம் பயிரின் நிலைக்கு ஏற்ப நீரை பயன்படுத்துதல் குறித்து உரை ஆற்றினார். சிறுகமணி KVK பண்ணை மேலாளர் ராதாகிருஷ்ணன் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி எடுத்துரைத்தார். இதில் வேளாண்மை அலுவலர் தேசிங்கு ராஜா நன்றி உரை ஆற்றினார். பிற துறை சார்ந்த அலுவலர்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.

தனலெட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சுற்றுப்புற சூழல் சீரமைப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நடை பயணம் மேற்கொண்டனர். உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டு பொறி வைத்தல் குறித்து செயல்வடிவம் செய்து காட்டினர்.

தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேளாண்மை இறுதி ஆண்டு மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம் பற்றி பள்ளி மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும் மர கன்றுகள் வழங்கி எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில்  முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.