1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : ஒருவர் கைது
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் R. வின்சென்ட் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக திருவெறும்பூர் வாழவந்தான்கோட்டை எழிழ் நகர் வேங்கூர் கூத்தைப்பார் ஆகிய பகுதிகளில் ரோந்து சுற்றி பின்னர் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருவெறும்பூர் – வேங்கூர் சாலையில் கூத்தைப்பார் பொன் அரசு காத்த அம்மன் கோயில் அருகில் வாகனத்தணிக்கை செய்து கொண்டிருந்த போது வடக்கில் இருந்து தெற்கு பக்கம் நோக்கி வந்த வெள்ளை நிற மாருதி ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்து பார்க்க அதில் 30 மூட்டைகளில் சுமார் 1500 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அந்த நபரை கைது செய்து விசாரிக்க அவரது பெயர் முருகானந்தம் (23) திருச்சி என்றும் வேங்கூர் கூத்தைப்பார் ஆகிய பகுதியில் இருந்து பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு வாங்கி BHEL மற்றும் இண்டஸ்ரியல் எஸ்டேட்களில் பணிபுரியும் வடநாட்டு ஒப்பந்த பணியாளர்களுக்கும் இரவு நேர டிபன் கடைகளுக்கும் அதிக விலைக்கு விற்க கடத்தி வந்தது தெரியவந்ததால் வழக்கு சொத்துக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.