திருச்சி அருகே சாலை விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலி
திருச்சி கம்பரசம்பேட்டை அருகே இன்று காலை நடந்த விபத்தில் திருச்சி ஊர்க்காவல் படையை சேர்ந்த மாதவன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவர் திருச்சி ஊர்க்காவல் படை வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி வந்துள்ளார். அப்போது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்ற லாரி மீது மோதி உள்ளார். இதில் மாதவன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.
தகவலறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
