மாணவர் விடுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ சேதம்

0 670
Stalin trichy visit

கொரோனா ஒருபுறமிருந்தாலும் இயற்கை செய்யும் பல தாண்டவம் பலரது வாழ்வில் மறையாத தலும்பாக்கி செய்துவிட்டு செல்கின்றனர். ஒரு பாமரக் குடும்பத்தில் ஆட்டோவை மட்டுமே வைத்து வாழ்வாதாரத்தை நகர்த்தி வந்தவரின் ஆட்டோவே சுவர் இடிந்து முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

 

திருச்சி பெரிய மிளகுபாறை கள்ளர் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்ராஜ் (55). மத்திய பேருந்து நிலையத்தில் 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று வழக்கம் போல் அவர் வீட்டிற்கு எதிரே உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி சுற்று சுவரோரம் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று இரவு பெய்த மழையால் சுற்றுசுவர் வலுவிழந்து ஆட்டோ மீது விழுந்து நொறுங்கியது. இதனால் ஆட்டோ முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகள் முழுவதும் சேதமடைந்தது.இன்று காலை ஆட்டோ ஓட்டுனர் சஞ்சீவிராஜ் ஆட்டோவை வந்து பார்த்தபொழுது ஆட்டோ மீது சுவர் இடிந்து விழுந்து நெருங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பேட்டியளித்த ஆட்டோ ஓட்டுனர் சஞ்சீவிராஜின் அம்மா வீரலட்சுமி கூறுகையில்….”என் மகன் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதாகவும், தற்போது இந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தான் ஆட்டோவை வாங்கியதாகவும், ஊரடங்கு பிறகு தற்போது ஆட்டோக்கள் ஓடுதும் இருந்து வருகிறது. “நீங்கதான் பார்த்து எங்களுக்கு ஏதாவது செய்யணும்” என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்!

 

Leave A Reply

Your email address will not be published.