மண்ணச்சநல்லூரில் முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திருச்சி, மார்ச் 24 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூர் ஊராட்சியில் தமிழக முதல்வரின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ சீ. கதிரவன் பங்கேற்று பேசும் போது, எனக்கு முதன் முதலாக மைக் கொடுத்து என்னை பேச வைத்தவர் மண்ணச்சநல்லூர் திமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர் சீனிவாச பெருமாள் தான் என்று கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர்கள் டி.சீனிவாசப்பெருமாள், செந்தில்குமார் கே. பி.ஏ. செந்தில் பேரூராட்சி தலைவர் சிவா சண்முக குமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.