மணப்பாறை அருகே நடைபெற்ற வள்ளிகும்மி நிகழ்ச்சி

0 153
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24  மணப்பாறை அருகே முதன்முறையாக நடைபெற்ற வள்ளி கும்மி‌ நிகழ்ச்சி.
நூற்றுக்கணக்கானோர் ஆட ஆயிரக்கணக்கானோர் கண்டுரசித்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வி.இடையபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வடதாளி அய்யனார், ஸ்ரீ முப்புலியான், ஸ்ரீ நெடுஞ்சடையன், ஸ்ரீ லாடசன்னாசி, ஸ்ரீ வேடிக்கை செல்லையா, ஸ்ரீ கன்னிமார் அம்மன். ஸ்ரீ முதாரி பட்டவன், ஸ்ரீ ஆரியப்பெருமாள் கோவிலின் மகா கும்பாபிசேக விழாவின் 48-ம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் மிகவும் புகழ்பெற்ற வள்ளிகும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.

பட்டிமன்ற பேச்சாளரும், சின்னத்திரை பிரபலமுமான மஞ்சுநாதன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட வள்ளிக் கும்மி நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒரே சீருடையில் வரிசையில் அழகாக நின்று பாடலுக்கு ஏற்ப நடனமாடி அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தனர்.

மணப்பாறை பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சியைக்கான சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.