ஹிந்தி திணிப்பு என்று பொய்களை கூறி வருகின்றனர்: அண்ணாமலை பேச்சு

0 185
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24  மும்மொழி கொள்கையை ஆதரித்து திருச்சி மன்னார்புரத்தில் பா.ஜ.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில்,

தமிழகத்தில் ஹிந்தி  திணிப்பு என்று மீண்டும் பொய்கள் கூறி வருகின்றனர் நாங்கள் புதிய கல்விக் குழுவில் வர இருக்கின்ற ஆரம்ப கல்விக்காக தான் போராடுகின்றோம் உண்மையை உரக்க சொல்வதற்காக தான் பொதுக்கூட்டங்கள் நடத்துகின்றோம்.

மாநிலத்தின் மீது அக்கறை இருக்கா என கர்நாடகா துணை முதல்வர் கேட்கிறார்.  அக்கறை இருப்பதால்தான் கர்நாடகா துணை முதல்வர்  வருகைக்கு கருப்பு கொடி காட்டி உள்ளோம் தஞ்சை காவிரி விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் தண்ணீர் தராத அவரை தமிழக அரசு  அழைத்து ஆராதிக்கின்றனர்.

முழு இந்தியாவை திரும்பி பார்க்க வைத்து விட்டோம் என முதல்வர் பேசுகிறார் அது பொய்யானது 2026 இல் எந்த மாற்றமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர் ஆனால் பொய்யான கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.

கனிமொழிக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் தமிழகம் என்று கனிமொழி கூறுகிறார் உங்கள் தமிழகம் இல்லை எங்கள் தமிழகம் தான் நாங்கள் தமிழர்கள் தான் உங்களைப் போன்று குடும்பத்தை வைத்துக்கொண்டு போராடவில்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக இருப்பது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று அவர் வாரிசுகளை வைத்து அரசியலுக்கு வரவில்லை அவர் முயற்சியால் வந்துள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறது பாஜக அங்கு வெற்றியை நிலைநாட்டி உள்ளது.

கூட்டணியில் இருக்கக்கூடிய கார்த்திக் சிதம்பரமே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு குறித்து பேசி உள்ளார். சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு இங்கு போராட்டங்கள் நடத்த திமுக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக போராட்டங்கள் நடத்தியது தமிழக முதல்வருக்கு கார்த்திக் சிதம்பரம் அறிவுரை கூற வேண்டும்.

ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள். டாஸ்மாக் மூடுகின்றேன் என சொன்னார்கள். ஆனால் மூடவில்லை தற்போது டாஸ்மாக்கை வைத்து ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள் செந்தில் பாலாஜி டாஸ்மாக் துறையிலும் ஊழல் செய்தார் ட்ரான்ஸ்போர்ட் துறையிலும் ஊழல் செய்தார் அவர் பத்து ரூபாய் செந்தில் பாலாஜியாக இருந்தவர் 30 ரூபாய் செந்தில் பாலாஜியாக மாறி உள்ளார்.

எந்தப் போராட்டத்திற்கும் திமுக அரசு அனுமதி கொடுக்கவில்லை இந்த பொதுக்கூட்டத்திற்கு கூட நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற்றுள்ளோம் நீதிமன்றம் செல்ல வேண்டியவர்கள் வெளியே இருக்கிறார்கள் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.