தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

0 3,910
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 25  திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனி மாத தேர்த்திருவிழா வரும் 1.4. 2025 திருத்தேர் வீதி உலா நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவிழா குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முசிறி கோட்டாட்சியர் ஆரமுததேவசேனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஞானசேகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அறங்காவலர் குழு தலைவர் விஜய் ஆனந்த், தொட்டியம் தாசில்தார், சேக்கிழார், செயல் அலுவலர்கள் இளவரசி, விஜய், உள்ளிட்ட பல முன்னிலையில்
கூட்டத்தில் விழாவிற்கு தொடர்புடைய அலுவலர்களும் கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் 1.4. 2025 அன்று திருத்தேர் தலை அலங்காரம் ஏற்றும் முன்பு கீழே வைக்கப்பட்டுள்ள சாமி கூண்டின் மீது மாலைகள் போட வேண்டும் என்றும் தலையலங்காரம் ஏற்றியவுடன் உள் கரணை, நெட்டி மாலை, சேலைகள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு தேர் முழுமையாக கட்டப்படும் வரை தேரின் மீது ஏறி மாலைகள் போடக்கூடாது எனவும் ,
3.4. 2025 அன்று திருத்தேரானது கோவிலில் இருந்து வீதி உலா புறப்படும் நேரம் மாலை 4 மணி எனவும் தீர்மானிக்கப்பட்டது ,அருள்மிகு மதுரை காளியம்மன் கோயில் வீதி உலா செல்லும் அனைத்து இடங்களிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வீடியோ பதிவு செய்வது,
தொட்டியம் தாலுகாவில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையினை திருவிழா நாட்களில் மூடக்கோரி காவல்துறையினர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து திருவிழா நடைபெறும் நாட்களில் விடுப்பு அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை அனுப்ப முடிவு செய்வது,
விழா நாட்களில் எந்த ஒரு ஜாதி -சமய வேறுபாடு இல்லாமல் அமைதியான முறையில் திருவிழா கொண்டாடப்படவும், உயர்நீதிமன்ற உத்தரவின் படி எந்த ஒரு சாதி மத கொடிகள், சின்னங்கள் மற்றும் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டது, சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் மற்றும் சாதிய உணர்வுகளை தூண்டும் வாசகங்கள்,
படங்கள் கொண்ட பனியன்கள், தொப்பிகள் அணிந்து விழாவில் பங்கேற்க கூடாது என தீர்மானிக்கப்பட்டது.

திருவிழாக்கடைகளை சிவன் கோயில் அருகில் உள்ள மைதானத்தில் மட்டுமே அமைத்திட தீர்மானிக்கப்பட்டது. திருவிழா நாட்களில் தொட்டியம் பேரூராட்சியின் சார்பில் அதிகளவு நடமாடும் கழிப்பறைகளை அமைப்பது, வானவேடிக்கை நடைபெறும் நாள் அன்று இரண்டு தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைப்பது, தொட்டியம் பேரூராட்சி சார்பில் திருவிழா காலங்களில் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்கிட அறிவுறுத்துவது,
பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதியினை தொட்டியம் அரசு மருத்துவமனை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்திருப்பது, திருவிழா காலத்தில் தொட்டியம் சின்னவாய்க்காலில் தொடர்ச்சியாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுப்பது,
தேர் செல்லும் வீதிகளில் மின் விநியோகத்தை தமிழ்நாடு மின்சார வாரிய துறை சிறப்பாக கையாள அறிவுறுத்துவது, தொட்டியம் தாலுகாவில் உள்ள சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களும் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.